ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி.ஜூன் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்ட நிலையில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மே மாதத்திலேயே குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட ஷெட்யூலை நிறைவு செய்துவிட்ட பின்னர் தான் அஜித், விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் மீண்டும் இணைவார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் துவங்கவுள்ள இந்தப் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதில் மூன்று கதாபாத்திரத்திங்களில் ஹீரோ மற்றும் வில்லன் என வேறு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மட்டுமில்லாமல் இளம் வயது லுக்கிலும் அஜித் தோன்றவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தில் மேலும் ஒரு முன்னணி நடிகர் இணையுள்ளதாகவும் அவருக்கு தான் ஸ்ரீலீலா ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகைகள் சிம்ரன் அல்லது மீனா இருவரில் ஒருவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் முன்னதாக அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத்தில் சண்டை ஆக்ஷன் காட்சிகளுக்கான ரிகர்சலை தற்போது அஜித் மேற்கொண்டு வருவதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் ஸ்டண்ட் மாஸ்டராக இணைந்துள்ளார். அனிமல், துணிவு மற்றும் கங்குவா போன்ற படங்களை தொடர்ந்து இந்தப் படத்திலும் சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இணைந்துள்ளார். நடிகர் அஜித் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.