ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான ‘காந்தாரா’ படத்தின் வெற்றிக்குப் பின்னர், அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சமீப நாட்களில் இந்தப் படத்திற்கான புதிய தகவல்கள் எதுவும் வெளியாகாததால், படத்தின் வெளியீடு தாமதமாகலாம் என்ற வதந்திகள் இணையத்தில் பரவின. இதற்கு பதிலளிக்கும் வகையில், வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக பரவிய வதந்திகளை மறுக்கும் விதமாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், “காந்தாரா: சாப்டர் 1 தள்ளிப்போகிறதா?” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. அதன் பின்னர், ‘இல்லை’ என்ற பதில் பல்வேறு மொழிகளில் காணப்பட்டது. இதன் மூலம், ‘காந்தாரா: சாப்டர் 1’ அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.