Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

காஞ்சனா 4 ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துவிட்டேன்… அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘முனி’ படத்தின் மூலம் ஹாரர் வகையை ஹார்பர் காமெடியாக மாற்றிய பெருமை ராகவா லாரன்ஸுக்கு உண்டு. இதைத் தொடர்ந்து ‘காஞ்சனா’ படத்தின் மூலமும் அவர் காமெடி களத்தில் பேய்களை உலவ விட்டார். இந்த ட்ரெண்ட் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ‘காஞ்சனா’ படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ‘காஞ்சனா’ படத்தில் சரத்குமார், ராய் லட்சுமி, கோவை சரளா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். 

அடுத்தடுத்து ‘காஞ்சனா 2’ மற்றும் ‘காஞ்சனா 3’ படங்களையும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்தார். இந்த படங்களும் ரசிகர்களை கவர்ந்தன. நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்து இயக்குநர்களுடன் தன்னுடைய இயக்கத்திலும் படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வருகிறார். ராகவா லாரன்ஸ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் அடுத்ததாக ‘காஞ்சனா 4’ படம் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக லாரன்ஸ் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை அவர் நிறைவு செய்துவிட்டதாகவும் அதையொட்டி அடுத்தடுத்த வேலைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் கதையிலும் தயாரிப்பிலும் ‘பென்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News