Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

காக்க காக்க பாடலுக்கு கணவருடன் ஜோடியாக ஆட்டம் போட்ட நமிதா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை நமிதா‌”அர்ஜுனா அர்ஜுனா”, “இடுப்பாட்டும் இளவம்பஞ்சு காடு”, “சட்டர்டே நைட் பார்ட்டிக்கு போகலாம் வறியா” போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு அவர் ஆடித் அசத்தியிருப்பார். விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், விஜய், அஜித், பிரசாந்த் போன்ற பலர் உடன் நமிதா நடித்துள்ளார்.

குஜராத்தில் உள்ள சூரத்தில் பிறந்த நமிதா, தற்போது பாஜக கட்சியில் உறுப்பினராக உள்ளார். 2017 ஆம் ஆண்டு, அவர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். 2022 ஆம் ஆண்டு, நமிதா இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இன்னும் தனது மழலை அழகுடன் அவர் காணப்படுவது அவரது ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

சமீபத்திய பேட்டியில் நமிதா சினிமாவில் பலரால் ஏமாற்றப்பட்டதாக கூறியுள்ளார். சிலர் தன்னை கடத்தியதாகவும் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார். தனுஷ் படம் என கூறி, இறுதியில் தயாரிப்பாளரின் உறவினரை ஹீரோவாக நடிக்க வைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். விஜய் மற்றும் அஜித்துடன் நடித்த அனுபவங்கள் குறித்து அவர் உரையாடினார்.

இந்த நிலையில், நமிதா மற்றும் அவரது கணவர் வீரேந்திர சவுத்ரி இருவரும் கருப்பு நிற உடையில், காக்க காக்க படத்தில் வரும் “ஒன்றா ரெண்டா” பாடலுக்காக நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சீக்கிரமே மீண்டும் சினிமாவில் நடிக்க ஏற்பாடுகளை செய்துவருகிறார் நமிதா என கூறப்படுகிறது.

Video Link: https://www.instagram.com/reel/C7ZzBs0SQEv/?utm_source=ig_embed&ig_rid=67c5c593-c166-48e8-b550-9a4cdd56be4d&ig_mid=91DB5C40-EC3D-4595-B2C4-F4B01F8EFE74

- Advertisement -

Read more

Local News