Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கவினுக்கு ஜோடியாகும் நயன்தாராவா? புது காம்போவா இருக்கே….

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் டாடா, ஸ்டார் போன்ற வெற்றிப்படங்களை வழங்கியவர் நடிகர் கவின். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த கவின் தொடர்ந்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

அந்த வரிசையில், ஸ்டார் படத்திற்கு பிறகு, இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் பிளடி பகர் மற்றும் அருண் இயக்கும் ஊர் குருவி படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்திலும் கவின் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என்றும், படத்தை எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் விஷ்ணு ஏதாவன் இயக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, விஷ்ணு ஏதாவன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும், லியோ மற்றும் டாடா படங்களில் இடம்பெற்ற பாடல்களை எழுதியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News