சூரி பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால், கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். இந்த படம் சூரியின் திரைப்பயணத்தில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது, மேலும் அவருக்கு மாபெரும் அங்கீகாரத்தை வழங்கியது.

‘விடுதலை’ படத்தின் வெற்றியின் பின்னர், அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதனிடையே, சூரி, இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘கருடன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது, மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.இந்த ‘கருடன்’ படத்திற்கான கதை வெற்றிமாறன் எழுதியுள்ளார்.

இதில் சூரியுடன் இணைந்து சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னிமுகுந்தன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தை வெற்றிமாறனே தயாரித்துள்ளார். படம் வரும் மே 31ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.இந்நிலையில், இன்று சென்னையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இயக்குனர் வெற்றிமாறன், சூரி, சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டுள்ளனர்.சிவகார்த்திகேயன் விழாவில் கலந்து கொண்ட அனைத்து பிரபலங்களுடனும் கை கொடுத்தார். விஜய் சேதுபதியை அணைத்து கட்டிப்பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.