இயக்குனர் பிரபு சாலமன் தனது மகளை கதாநாயகியாக அறிமுகம் செய்யும் படத்தை இயக்கவிருக்கிறார். பிரபு சாலமனின் மகள் ஹசேல் ஷைனி ஏற்கனவே சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளார்.

படத்தின் ஆரம்ப வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், இப்படத்தின் கதாநாயகனாக வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஶ்ரீஹரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் படத்துக்காக சில வெளிநாடுகளில் பயிற்சி பெற்றுள்ளார். இது குறித்து விஜய் ஶ்ரீஹரியின் அப்பா, நடிகர் ஆகாஷின் நெருக்கமானவர்கள் மூலம் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

விஜய் ஶ்ரீஹரிக்கு தற்போது 25 வயது கடந்துவிட்டது. அவர் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருந்தார். இது சினிமாவில் நுழைய சரியான நேரம் என அவரது அப்பா நினைக்கிறார். ஆகாஷ் தனது மகனின் விருப்பத்திற்கு எப்போதும் எதிர்ப்பு காட்டவில்லை.




ஶ்ரீஹரிக்கு கடந்த சில வருடங்களாகவே சினிமா வாய்ப்புகள் வந்தாலும், பெரிய பேனர் அல்லது முன்னணி இயக்குனர்களின் படத்தில் அறிமுகமானால் நல்லது என ஆகாஷ் நினைத்தார்.அவர் நினைத்தது போலவே இயக்குனர் பிரபு சாலமன் ஒரு கதைக்காக புதுமுகத்தைத் தேடிவந்த போது, அந்தப் புதுமுகம் விஜய் ஶ்ரீஹரியாகிவிட்டார். கதைக்குப் பொருத்தமான ஹீரோவாக விஜய் ஶ்ரீஹரி அமைந்ததால், படத்தின் வேலைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டுவிட்டன.இப்படம் கும்கியை போல் கதைக்களத்தில் இருக்கும் எனவும் ஆனால் யானைக்கு பதிலாக சிங்கம் எனவும் கூறப்பட்டுள்ளது.