Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

கடுப்பாகி போட்டியாளர்களை திட்டிய முத்து… அனல் பறக்கும் பைப் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்! #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 இல், வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு நேற்றுப்போல இன்றும் பைவ் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. நேற்று பெண்கள் அணியினர் ஹோட்டல் பணியாளர்களாக செயல்பட்டு, அங்கு வாடிக்கையாளர்களாக வந்த ஆண்களை முடிந்தவரை எரிச்சலடையச் செய்தனர். (பிக்பாஸ்-ன் இன்றைய ப்ரோமோக்கள் அடுத்தடுத்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன அவற்றை கிளிக் செய்து காணலாம்)

அடுக்கடுக்கான புகார்கள் இந்த சூழ்நிலையில், இன்று நடந்த பிக்பாஸ் பைவ் ஸ்டார் ஹோட்டல் போட்டியில், பிக்பாஸ் ஹோட்டல் குறித்த புகார்களை வெளியிடுமாறு அறிவுறுத்தினார். அதன்பின், போட்டியாளர்கள் புகார்களை பலகையில் எழுதினர்.

மேலும், சரியான ஒத்துழைப்பை வழங்க ஹோட்டல் நிர்வாகம் தவறியுள்ளது, ஹோட்டல் சுத்தமாக பராமரிக்கப்படவில்லை என்பதற்கான புகார்களை பெண்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து கூறி வந்தனர். இதற்கிடையில், முத்துக்குமரன், வாடிக்கையாளர்களை புரிந்துகொள்ள அவகாசம் வேண்டும் என தெரிவித்தார்.

திருட்டுப் பயலுக என கூறிய முத்து பிக்பாஸ் பைவ் ஸ்டார் ஹோட்டல் மீது வந்த புகார்களை கருத்தில் கொண்டு, பிக்பாஸ் ஹோட்டல் மேனேஜரை மாற்ற முடிவு செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த முத்து, வேண்டுமென்றே சிலர் அதை செய்ததாக கூறி, கோபமாக “திருட்டுப் பயலுக” என உரைக்கிறார். அவர் யாரை குறித்துக் கூறுகிறார், ஏன் அவர் இப்படியாக கூறுகிறார் என்பதனை இன்றைய நிகழ்ச்சியில் பார்க்கவேண்டும்.

- Advertisement -

Read more

Local News