இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் “விடுதலை பாகம் 1”. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், தமிழ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். சூரி கதாநாயகனாக அறிமுகமாகி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரம்மிக்க வைத்தார். விஜய் சேதுபதி நடிப்பும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் நீண்ட காலமாக படமாக்கப்பட்டு வந்த நிலையில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்டது என தகவல் வெளியானது. தற்போது படக்குழு தரப்பில் இருந்து விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மொத்தம் இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒன்றில் விஜய் சேதுபதி கையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் மிகுந்த கோபத்துடன் இருக்கிறார். மற்றொன்றில், சைக்கிளைப் பிடித்தபடி, மஞ்சு வாரியருடன் நிற்கிறார்.
ஒரு போஸ்டரைப் பார்த்தால் ரத்தம் தெறிக்கிறது, மற்றொரு போஸ்டரில் பார்த்தால் காதல் ததும்பும் நிலையில் “விடுதலை 2” படத்தில் பெரும்பகுதி விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் ஃப்ளாஷ் பேக் காட்சிகளாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இறுதிகட்ட படப்பிடிப்பில் எனவும் அந்த போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.