சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்துக்கு ‘மூன் வாக்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.கடைசியாக பிரபுதேவா நடிப்பில் ‘பகீரா’ படம் வெளியானதும் ஆனால் அது அப்படம் பெரிதாக ஜொலிக்கவில்லை. இந்நிலையில் தற்போது அவர் விஜய்யுடன் இணைந்து ‘தி கோட்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.


அவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள இந்த மூன் வாக் படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் இயக்குகிறார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இவர்கள் இருவரின் காம்போவில் ‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேட்ஸ்’ என 90-களில் வெளியான படங்களின் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. கடைசியாக 1997-ல் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தனர். அதற்கு பின்னர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இந்த மூன் வாக் படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

இப்படத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்க்ஸி, மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்தப் படத்தின் தலைப்பு இன்று வெளியிட்டுள்ளது.இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு 2025-ல் பான் இந்தியா படமாகத் திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.