சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்ர் சீமான், “நான் சொன்ன பிறகே, இயக்குநர் வினோத், H என்று போட்டுக்கொண்டு முன்னெழுத்தை (இனிஷியல்) தமிழில் எச் என போட ஆரம்பித்தார்” என்றார்.
அவரது பேச்சு வைரலானது. இது குறித்து தற்போது வினோத் விளக்கம் அளித்து இருக்கிறார்.
அவர், “ஆம் அவர் சொல்லித்தான் என்னுடைய பெயரை இனிஷியலை, தமிழில் போட்டேன். சீமான் அண்ணன் போன் செய்து. ‘டேய்! நீ என்ன ஆங்கிலத்தில் இனிஷியல் போடுகிறாய்’ என்றார்.
அதற்கு நான், ‘தமிழில் போட்டால் யாரும் என்னை அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று தயாரிப்பு நிறுவனங்கள் தயங்குகின்றன என்று பதில் அளித்தேன்.
அதற்கு அவர், ‘எவன் சொன்னது.. அவனிடம் நான் பேசுகிறேன்.. நீ தமிழிலேயே இனிஷியலை போடு!’ என்றார். அதிலிருந்துதான் தமிழில் போட ஆரம்பித்தேன்” என்றார் வினோத்.