Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

எழுந்து நிற்க சிரமப்பட்ட சல்மான்கான்… விரைவில் குணமடைய வேண்டிய ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘சிக்கந்தர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சல்மான், அசவுகரியமாக காணப்பட்டார். பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே, சல்மான் கான் அருகே வந்தபோது, அவரிடம் பேசுவதற்காக சல்மான் எழுந்து நிற்க முயற்சி செய்தார். அப்போது, அவரால் உடனடியாக எழுந்து நிற்க முடியவில்லை. சல்மான் கான் மெதுவாக எழுந்து நிற்பதை பார்த்த ரசிகர்கள் அதைப் பார்த்து கவலை தெரிவித்துள்ளனர். இது பற்றிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்வை அறிந்த ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை தெரிவித்துள்ளனர். சல்மான் கானின் உடல்நிலை சரியானதும், வரும் நவம்பர் மாதத்தில் ‘சிக்கந்தர்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News