நடிகர் சத்தியராஜ் அப்போது மட்டுமின்றி இப்போதும் தமிழ் சினிமாவில் பிஸியான நடிகர். 80 மற்றும் 90களில் முண்ணனி ஹீரோவாக கலக்கியவர் இவர்.அமைதிப்படை படத்தில் வரும் அமாவசை போன்ற கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சத்யராஜ் பொது நிகழ்ச்சிகளிலும் அதே ஸ்டைலில் பேசி ரசிகர்களை மகிழ்விப்பார்.
இவர் ஹீரோ, வில்லன், காமெடி, தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். தமிழ் சினிமாவில் நாற்பதைந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் தமிழ், தெலுங்கு, மலையாளம் , என அனைத்து மொழிகளிலும் மொத்தம் 240க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் கடைசியாக கதாநாயகனாக நடித்த பத்து படங்களும் சரியாக ஓடவில்லை, பெரிதாக பிஸ்னஸ் ஆகவில்லை.ஒரு படம் வெற்றி பெறவில்லை என்றால் அப்போது ஹீரோதான் பொறுப்பு, இதனால், கேட்ட சம்பளத்தை தரமாட்டாங்க, அட்வான்ஸ் கொடுப்பாங்க, படம் ரிலீஸ் ஆகுறப்போ அதற்கு காசு இல்ல, இதற்கு காசு இல்லை என்று, கொடுத்த பைசாவையும் வாங்கிட்டு போய்விடுவாங்க. என் மார்க்கெட் போக காரணம் நல்ல கதைகளை நான் சரியாக தேர்வு செய்யாமல் மார்க்கெட்டை கோட்டைவிட்டேன் என்றார்.
அந்த சமயத்துல, நான் ஹீரோவாக நடித்த நேரத்தில், அஜித், சூர்யா, விஜய் என பல இளம் வளரும் நடிகர்கள் நடிக்க வந்தார்கள். அவர்களோட படங்கள் நன்றாக ஓடின. அந்த நேரத்தில் அவங்களோட என்னால போட்டி போட முடியல தாக்குபிடிக்க முடியாம கடைசியில 2008ம் ஆண்டுக்கு பிறகு, நல்ல, குணசித்திர கேரக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகனா உடனே மாறிவிட்டேன் என்றார்.தற்போது விரைவில் திரைக்கு வரவுள்ள மழைப் பிடிக்காத மனிதன் மற்றும் வெப்பன் திரைப்படத்தில் சத்தியராஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.