சென்னையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வசித்த பகுதி சாலைக்கு அவரது பெயர் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பான அவரது பதிவில், “என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயரை மாற்றி வைத்ததற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழக மக்களின் சார்பிலும், திரையுலகத்தின் சார்பிலும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று இளையராஜா பதிவிட்டுள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயர் சூட்டியதற்காக முதல்வருக்கு கமல்ஹாசன், எஸ்.பி.பி.சரண் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
