Thursday, April 18, 2024

எனக்கு ஹீரோயினே கிடைக்கல…என்ன பார்த்த எப்படி தெரியுது கண்கலங்கிய புகழ்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டிவியின் நட்சத்திரமான புகழ் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜொலித்த பின்னர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளி ரோலில் பங்கேற்று மக்களை கவர்ந்தார். மக்களை மகிழ்விக்க பலவிதமான கெட்டப்புகளை போட்டு அசத்திய புகழ் மக்களின் தொடர் வரவேற்பால் பல படங்களில் வாய்ப்பையும் பெற்றார்.தற்போது கதாநாயகனாகவே ஆகும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்.

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பல தரப்பினரின் வரவேற்பைப் பெற்று பெரிதும் ஹிட்டான நிகழ்ச்சியாக‌ அடுத்தடுத்த சீசன்களை நோக்கி நகர்ந்து வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சக போட்டியார்களாக வரும் இளம் பெண் போட்டியாளர்களை வம்புக்கு இழுப்பது, ரகளை செய்வது என நகைச்சுவை செய்து ஃபேமஸ் ஆன புகழ் அந்த நிகழ்ச்சியில், நடிகை ரம்யா பாண்டியன் தொடங்கி ரித்திகா, ஷெரின், சுனிதா, பவித்ரா லட்சுமி, சிருஷ்டி டாங்கே, தர்ஷா குப்தா வரை அனைவரிடமும் வம்பு இழுத்து ரகளை செய்தார்.

இப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத கதாப்பாத்திரமாக வலம் வந்த புகழ் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு நடிகராக அறிமுகமாகி சிக்ஸர், தாதா 87, கைதி, காக்டெய்ல், சபாபதி, என்ன சொல்ல போகிறாய், வீட்டுல விசேஷம், யானை, கருங்காப்பியம், வலிமை, போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்திங்களில் நடித்து வெள்ளித்திரையிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்.

இதற்கிடையில் விஜய் டிவி புகழ் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், என் கூட ஹீரோயினா நடிக்கிறீங்களானு கேட்டா, வேண்டானு ஒரு மாதிரி பேசுறாங்க, இன்ஸ்டாகிராம்ல போய் நானே என் கூட ஹீரோயினா நடிங்க கேட்டு மெசேஜ் பண்ணாக்கூட, பார்த்துட்டு ரிப்ளை கூட பண்ணமாட்றாங்க, அது ஏனுதான் தெரியல. அந்த மாதிரி நேரத்தில் நானே என்னை சமாதானப்படுத்திக் கொண்டு யாராவது நிச்சயம் வருவாங்கனு நினைப்பேன். என் கூட நடிக்க விருப்பம் இல்லை என்றாலும், அட்லீஸ்ட் கதை என்னனு கேட்கலாம். ஆனால், அதுக்கூட கேட்க மாட்டாங்க என்று அப்போட்டியில் ஆதங்கத்தோடு கண்கலங்கி பேசியுள்ளார் புகழ்‌.

- Advertisement -

Read more

Local News