Thursday, April 18, 2024

சியான் 62 டைட்டில் வெளியீடு! தெறிக்கவிடும் வீர தீர சூரன்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சியான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை தங்கலான் படத்தின் மற்றொரு மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது.அதைதொடர்ந்து சியான் 62 படத்தின் டைட்டில் ரிவீல் வீடியோவும் வெளியானது.

அதேசமயம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் மகிழ் திருமேனி இயக்ககத்தில் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகவுள்ள தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதிகள் இன்னமும் அறிவிக்கப்படாததால் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சித்தா படத்தின் வெற்றி நாயகன் ஒருபக்கம் சித்தார்த் என்றால் மறுபக்கம் இப்படியொரு அருமையான கதையை சித்தார்த்துக்கு கொடுத்து நடிக்க வைத்த இயக்குனர் அருண்குமார் தான். சித்தார்த்துக்கே ஹிட் கொடுத்த இயக்குநர் தனக்கும் ஹிட் கொடுப்பார் என நினைத்து உடனடியாக சியான் 62 படத்துக்கு அவரை தேர்வு செய்தார் விக்ரம்.

இந்நிலையில் சியான் 62 படத்துக்கு வீர தீர சூரன் என வெறித்தனமான தமிழ் தலைப்பை அருண் குமார் வைத்திருக்கிறார்.நேற்று டைட்டில் வீடியோ வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே சோஷியல் மீடியாவில் படத்தின் டைட்டில் வழக்கம் போல லீக் ஆனதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சியான் 62 டைட்டில் வீடியோவில் மளிகை கடையில் கடைக்காரராக சியான் விக்ரம் பொட்டலம் போட்டுக் கொண்டு இருக்க அவரை ஒரு கும்பல் போட்டுத் தள்ள ஆயுதங்களுடன் வருகின்றனர். கடைசியில் வேலை பார்த்துக் கொண்டே துப்பாக்கியை ரெடி செய்து கொல்ல வரும் ஆட்களில் ஒருத்தனை சுடவும் அனைவரும் அலறியடித்து கொண்டு அந்த கும்பல் ஓடும் காட்சியை தற்போது டைட்டில் அறிவிப்புடன் வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News