Thursday, April 18, 2024

விரட்டியடிக்கப்பட்ட கொட்டாச்சி…விட்டுக்கொடுக்காத விவேக்…‌

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் விவேக் மறைந்து நேற்றோடு மூன்றாண்டுகள். எல்லா காமெடி நடிகர்களை அரவணைத்து வாய்ப்பு கொடுத்து, தான் உயர்ந்தால் போதாது தன்னோடு இருப்பவர்களையும் சேர்த்து உயரத்துக்கு கொண்டு செல்லும் நல்லெண்ணம் கொண்ட விவேக் திரையில் மட்டும் அல்லாது திரைக்கு வெளியிலும் எண்ணற்ற உதவிகளை செய்து வந்தவர். நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி தான் நடிகராக மாற காரணமே விவேக் சார் தான் என பேட்டி ஒன்றில் காமெடி நடிகர் விவேக்குடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

விவேக் சார் எப்பயும் அவங்க டீம்ல இருக்குற துணை காமெடி நடிகர்களை விட்டுக்கொடுத்ததே இல்லை.அவங்களுக்கு எப்போ எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் முதல் மனுஷனா போய் அதை தீர்த்து வைக்க முடிந்த உதவிகளை செய்யுற நல்ல குணம் கொண்ட மனுஷன்.

நான் ஒருதடவ சினிமாவுல நடிக்க ஆசைப்பட்டு நடிக்குறதுக்காக போனப்போ யாரை பாத்தாலும் வித்தியாசமா சவுண்டா வணக்கம் வைப்பேன்.இதே மாதிரி தினமும் செஞ்சதுனால சிலருக்கு என்மேல எரிச்சல் ஆகிடுச்சு.இதுவே எனக்கு ஆப்பாவும் மாற ஆரம்பிச்சது‌. அப்போ எனக்கு துணையா நின்னு எனக்காக பேசி கொட்டாச்சி அப்டினு ஒரு கேரக்டர நடிகனாக மாத்துனதே விவேக் சார் தான் என்றுள்ளார்.

ஒரு நாள் சூட்டிங் ஸ்பாட்டுக்கு போனப்போ இடத்தில் சில பிரபலங்களுக்கு வணக்கம் வைச்சேன்.அவங்க எப்பவும் போல என்மேல கோபமா இருந்தாங்க அதுனால அவங்க கோபத்தை குறைக்க கொஞ்சம் நேரம் கழிச்சு மறுபடியும் வணக்கம் வைச்சேன்.ரொம்பவே டென்ஷனாகி யாருடா நீ என கேட்டார் மணிவண்ணன் . நான் நடிகன் சார் என சொன்னவுடனே ஆமா, இவர் தான் நடிகர் நாங்க எல்லாம் பெயிண்ட் அடிக்க வந்திருக்கோம் என சொல்லிட்டார். எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு உடனே என்ன வீட்டுக்கு அனுப்பி விட அங்கிருந்தவர்கள் முடிவு செஞ்சுட்டாங்க.

அப்போ இத தெரிஞ்ச விவேக் சார் எதுக்கு சார் அவனை வீட்டுக்கு அனுப்பனும். அவனும் நடிக்க வந்தவன் தான். அவன் நல்லா நடிக்கலைன்னா அனுப்பலாம். வாய்ப்பே கொடுக்காம எல்லாம் அனுப்புறது சரியில்லைனு அங்க இருந்தவங்களால இவர் பேச்சுக்கு மறுப்பே சொல்ல முடியல. அதுக்கு அப்புறம் விவேக் சார் என்கிட்ட வந்து உன்னை வீட்டுக்கே அனுப்ப முடிவு செஞ்சிட்டாங்க, இந்த படத்துல நல்லா நடிச்சாத்தான் சினிமாவுல நீ இருக்க முடியும்னு சொன்னார்.அவர் அன்னைக்கு மட்டும் பண்ண உதவியை என்னைக்குமே வாழ்நாள் வரைக்கும் மறக்க மாட்டேன். என்னோட முதல் சீனே விவேக் சாருடன் நடிச்சேன்‌. அதுக்கப்புறம் தொடர்ந்து தனது படங்களில் என்னை நடிக்க வைத்தார் என அவரோடான நினைவுகளை உருக்கமாக பகிர்ந்து கொண்டார் கொட்டாச்சி.

- Advertisement -

Read more

Local News