Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

உடையை பற்றியெல்லாம் யோசிக்க கூடாது… எனக்கு இதுதான் Comfort – நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரேமம் படத்தில் அறிமுகமானார் சாய் பல்லவி. முதல் படத்தில் அலட்டல் இல்லாத அழகுடன் அவரது இயல்பான முக பாவனைகளும், நடிப்பும் மலர் டீச்சரை பார்த்த ஒவ்வொரு ரசிகரும் தங்களது நெஞ்சத்தில் குத்தி வைத்துக்கொண்டனர். பிரேமம் படத்தில் அவரது நடிப்பை பார்த்தால் நடிப்பின் மீது ஆர்வம் இல்லாதவரா இப்படி நடிக்கிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழும். அந்த அளவுக்கு பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

அவர் தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் அவர் கடைசியாக நடித்த கார்கி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்போது அவர் சிவகார்த்திகேயனுடன் அமரன், தெலுங்கில் தண்டல், ஹிந்தியில் ஒரு படம் என பிஸியான நடிகையாக வலம் வருகிறார். அதேபோல் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் பெரும்பாலும் புடவை அணிந்தபடியே வருவார் சாய் பல்லவி. அது பலரையும் கவர்ந்துவிடும்.

இந்நிலையில் நிகழ்ச்சிகளுக்கு புடவை அணிந்துவருவது பற்றி ஒரு பேட்டியில் பேசியிருந்த சாய் பல்லவி, ‘எனக்கு எப்போதும் புடவைதான் வசதியாக இருக்கும். அதுதான் வசதியாக இருக்கிறது. ஒரு இடத்தில் பேச வேண்டும் என்றால்தான் என்ன பேச வேண்டும் என்று யோசிக்க வேண்டும். உடையை பற்றியெல்லாம் அந்த நேரத்தில் யோசித்துக்கொண்டிருக்கக்கூடாது. அதனால்தான் எனக்கு வசதியாக இருக்கும் புடவையில் நிகழ்ச்சிகளுக்கு வருகிறேன்’ என்றார்.

- Advertisement -

Read more

Local News