Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

இவங்க இரண்டு பேரும் எனக்கு அண்ணாக்கள் மாதிரி…அன்பறிவ் பற்றி மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நம்பிக்கை விருது வழங்கும் விழாவில் அன்பறிவ் சகோதரர்களுக்கு டாப்-10 இளைஞர்களுக்கான விருது வழங்கப்பட்டது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கி சிறப்புச் செய்தார். அப்போது அன்பறிவ் சகோதரர்கள் பற்றிப் பேசிய லோகேஷ் கனகராஜ், “எனக்கு இந்த விருதை வழங்குறதுல ரொம்பவே பெருமையா இருக்கு. ஏன்னா, ஸ்டன்ட் மாஸ்டர் என்பதைத் தாண்டி இவங்க இரண்டு பேரும் என்னுடைய அண்ணன்கள் மாதிரி.

இவங்க ‘மெட்ராஸ்’ படத்துல முதல் முறையாகச் சண்டைப் பயிற்சியாளர்களாக அறிமுகமாகியிருந்தாங்க. அப்போது என்னுடைய முதல் படமான மாநகரத்தை எடுத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய இரண்டாவது படம் ‘கைதி’. அதுல அன்பறிவ்தான் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்கள். அது அவங்களோட 100வது படமும் கூட. மூன்று வருடத்தில் 100 படத்துக்கும் அவங்க செஞ்ச உழைப்பை பார்த்துக்கிட்டு இருந்தவன் நான்.

ஒரு புரொடியுசர் கிட்ட முதல் முதலாக என்னை நம்பி பேசி இந்த பையன் கிட்ட நிறைய கதை இருக்கு விஷயம் இருக்கு. அவன் கிட்ட கதை கேளுங்க. நாளைக்கு அவன் பெரிய ஆளா வந்துருவானு சொல்லி ஆரம்பிச்சு விட்டது இவங்கதான்… என அவர்களுடனான அன்பை பற்றி பகிர்ந்துகொண்டார் லோகேஷ் கனகராஜ் .

- Advertisement -

Read more

Local News