Tuesday, November 19, 2024

இரு மாபெரும் சூப்பர் ஸ்டார்களுக்கு மத்தியில் பகத் பாசில்… பகத் பிறந்தநாளையொட்டி வெளியான ஸ்பெஷல் புகைப்படம்! #VETTAIYAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள பகத் பாசில் தனது டப்பிங் பணிகளை ஏற்கனவே முடித்துவிட்டார். இந்த படம் அக்டோபர் மாதத்தில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 8) பிறந்த நாள் கொண்டாடும் பகத் பாசிலுக்கு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘வேட்டையன்’ படக்குழு வாழ்த்து தெரிவித்திருந்தது.

தற்போது ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் என்ற இரு சூப்பர் ஸ்டார்களுக்கு மத்தியில் பகத் பாசில் இருக்கும் புகைப்படத்தை ‘வேட்டையன்’ படக்குழு பகிர்ந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News