மேடை கலைஞராக இருந்து பின்னர் சின்னத்திரை காமெடி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் ரோபோ சங்கர். ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுமாகி 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இந்த நிலையில் அவர் அடுத்து இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறார். அவருடன் இணைந்து ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி புகழ் ராஜா மற்றும் வினோத் ஆகியோருடன் இணைந்து ஸ்கிரிப்ட் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். சின்னத்திரை நடிகர், நடிகைகள் அதிகமாக நடிக்கும் இந்த படம் முழுநீள காமெடி படமாக உருவாகிறது. விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.
