Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

இந்த படத்தில் கேப்டன் மட்டும் இல்ல… அந்த நடிகையும் இருக்காங்க… இயக்குனர் விஜய் மில்டன் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் படம் மழை பிடிக்காத மனிதன். ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் டைட்டில் வெளியானபோதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், படம் குறித்து இயக்குநர் விஜய் மில்டன் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இந்தப்படத்தில் நாங்கள் கேப்டன் விஜயகாந்த்தை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தோம். இது தொடர்பாக அவரது மனைவி பிரேமலதா அவர்களிடம் உரிய அனுமதி பெற்று அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்றது. இறுதியாக அவரது அறையிலேயே ஐபோன் வைத்து எடுத்துக் கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. அதன் பின்னர் இன்றைய தொழில்நுட்பத்தை வைத்து அந்த காட்சியை டெவலப் செய்து கொள்ளலாம் எனவும் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள் கேப்டன் மறைந்து விட்டார்.

இதனால்தான் அவரது கதாபாத்திரத்தில் சத்யராஜ் சார் நடித்துள்ளார். ஆனாலும் எனக்கு கேப்டன் விஜயகாந்த் மீது அன்பு இருப்பதால் இந்த படத்தில் அவர் இருக்கும் படியாக ஒரு காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்த் ஒரு நடிகர் மட்டும் இல்லை. அவர் ஒரு தலைவர். அவரை ஒரு வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்துவது தவறு. எங்கள் படத்தில் முதலில் கேப்டன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்காத காரணத்தால் அவருக்கு பதிலாக சத்யராஜ் சார் நடிக்கின்றார்.

ஆனால், எனக்கு கேப்டன் விஜயகாந்த்தை மிகவும் பிடிக்கும். அவர் மீதான அன்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளேன். ஒருவர் மீது அன்பு வைக்க யாரிடமும் அனுமதி வாங்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் மட்டும் இல்லாமல் எனக்கு பிடித்த நடிகை சௌந்தர்யா இடம் பெறுவதைப் போல் காட்சி வைக்கப்பட்டுள்ளது என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News