Touring Talkies
100% Cinema

Monday, August 4, 2025

Touring Talkies

இந்தி சிறுவனை வம்பிழுத்த ரஜினி… தெறித்து ஓடிய சிறுவன் வேட்டையன் பட ஷூட்டிங்-ல் சுவாரஸ்ய சம்பவம்….

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்ச் சினிமாவில் பெரும்புகழையும், ஏராளமான ரசிகர்களையும் பெற்ற நடிகராக இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ்ச் சினிமாவைத் தாண்டி, உலகச் சினிமாவிலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் ரஜினிக்கு தனிச்செல்வாக்கு உண்டு. தற்போது வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், படப்பிடிப்புத் தளத்தில் ஒரு ஹிந்திப் பையனை வம்புக்கு இழுத்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இயல்பாகவே நகைச்சுவை உணர்வுடைய ரஜினிகாந்த் குறித்த இந்தச் சுவாரஸ்யமான தகவலை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஒரு பேட்டியில் கூறினார். அதில், சிவாஜி படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது, செட்டில் ஒரு ஹிந்திப் பையன் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனுக்குத் தமிழ் சரியாக வராததால், தமிழும் இந்தியும் கலந்து பேசுவான். அதைக் கேட்பது நகைச்சுவையாக இருக்கும் என்பதால், ரஜினி எப்போதுமே அந்தப் பையனை வம்புக்கு இழுத்துக்கொண்டே, சிரித்துக்கொண்டே இருப்பார்.

ஒருநாள் ஒரு சிறுவன் ரஜினியோடு புகைப்படம் எடுக்க விரும்பினான். அதற்கு ரஜினி சம்மதித்து, நீ காத்திரு, என் தலைமுடியை சீர் செய்துவிட்டு வருகிறேன் என்றார். இதைக் கேட்ட சிறுவன் கவலைப்பட்டு, உங்கள் தலையில் விக் இருக்க வேண்டும் இல்லையென்றால் உங்களோடு புகைப்படம் எடுக்க மாட்டேன். எங்கள் ஊரில் நீங்கள் இப்படித்தான் இருந்தால் ரசிப்பார்கள் என்று கூறிவிட்டு ஓடிச்சென்றான். பிறகு அந்த சிறுவனை அழைத்து ரஜினி விக்கோடு புகைப்படம் எடுத்ததாகப் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News