Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

இந்தியன் 2ல் மாஸ் டைட்டில் கார்ட்… கிரியேட்டிவிட்டியை தெறிக்க விட்ட ஷங்கர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் இன்று மிகப்பெரிய அளவில் வெளியாகியுள்ளது. ‘விக்ரம்’ படத்துக்கு உலகநாயகன் கமல்ஹாசனின் கண்ணில் வைத்தே லோகேஷ் கனகராஜ் டைட்டில் கார்டு ஒன்றை போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். அதேபோல், கடைசியாக ‘லியோ’ படத்திற்கு மார்வெல் தீமில் ஒரு டைட்டில் கார்டு இடம்பெற்று விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தின் டைட்டில் கார்டு எப்படி இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த கமல் ரசிகர்களுக்கு ஆரம்பமே ஷங்கர் சிறப்பாக வழங்கியுள்ளார்.

களத்தூர் கண்ணம்மாவில் குழந்தையாக கமல்ஹாசன் நடித்தது முதல் அரங்கேற்றம், நாயகன், சத்யா, குணா, இந்தியன், அவ்வை சண்முகி, ஹே ராம், குருதிப்புனல், ஆளவந்தான், சகலகலா வல்லவன், தசாவதாரம், விஸ்வரூபம், இந்தியன் 2 என ஒவ்வொரு படத்துக்கும் கமல்ஹாசன் எவ்வளவு கஷ்டப்பட்டு தனது தோற்றத்தையே மாற்றி நடிக்கிறார் என்பதை ஒவ்வொரு மாஸ்க்காக கழண்டு கடைசியில் ‘இந்தியன் 2’ தாத்தா மாஸ்க் வரை வந்து அதன் பின்னர் அனைத்து மாஸ்க்குகளும் ஒன்றாக சேர்ந்து ‘உலக நாயகன் கமல்ஹாசன்’ என்கிற டைட்டில் கார்டை உருவாக்கியுள்ளது.

தியேட்டருக்கு சென்று ‘இந்தியன் 2’ படத்தை முதல் நாள் முதல் காட்சியாக பார்க்க சென்ற ரசிகர்களுக்கு இந்த படத்தின் டைட்டில் கார்டே செம கூஸ்பம்ஸ் கொடுக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் வீடியோவாக எடுத்தே வெளியிட்டு வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News