லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடின உழைப்பினாலும், தனித்துவமான நடிப்பினாலும், மிகச்சிறந்த நடிகையாக கோலிவுட்டில் வலம் வருபவர். இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து, தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் உள்ளார்.

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அறம். வறண்டு கிடக்கும் கிராம், தண்ணீர் பிரச்சினை, மூடப்படாத ஆழ்துளை கிணறு போன்ற ஒரு கிராம மக்கள் சந்தித்த பிரச்சனையை தொகுத்து நல்ல திரைப்படமாக கொடுத்து இருந்தார் இயக்குநர் கோபி நயினார். மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த இந்த படத்தில் மாவட்ட ஆட்சியராக நடித்த நயன்தாராவின் நடிப்புக்கு பாராட்டுகளை அள்ளினார்.

தற்போது இயக்குனர் கோபி நயினார் கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அடுத்தப் படமான மனுஷி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியானது. இப்படத்தில், ஆண்ட்ரியா நாயகியாக நடித்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கோபி நயினார். முன்னணி நடிகர்கள் யாரும் என்னை கண்டுகொள்வதில்லை. நடிகைகள் தான் எனக்கு வாய்ப்பு தருகிறார்கள். சினிமாவில் நல்ல கதைகளை கொண்டு நல்ல படங்களை இயக்குபவர்களை தற்போது எல்லாம் ஹீரோக்கள் அழைத்து கதை கேட்பதில்லை என வருத்தப்பட்டார்.
பின்னர் தொடர்ந்து பேசிய அவர், அறம் படத்தின் கதையை நான் 5 நிமிடம் தான் நயன்தாராவிடம் சொன்னேன், உடனே அவர் ஒகே சொல்லிவிட்டார். அவர் பர்சில் இருந்து 3500 ரூபாயை எடுத்து கொடுத்து, கோபி சார் கோச்சிக்காதீங்க, பர்சில் இவ்வளவு தான் இருக்கு, இதை அட்வான்சா வெச்சிக்கோங்க என்று சொல்லி மீதி கதையைக்கூட கேட்கவில்லை என்று இயக்குநர் கோபி நயினார் அந்த பேட்டியில் நயன்தாராவை புகழ்ந்து பேசியுள்ளார்.