Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

அப்படியென்ன கீர்த்தி சுரேஷ் புடவ மேல எல்லாருக்கும் ஒரு கண்ணு? ஓமைகாட் விலை தெரிஞ்சா ஆடிபோயிடுவிங்க….‌

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நாக் அஸ்வின் இயக்கத்தில் தெலுங்கில் சாவித்திரியாக மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

தமிழில் அவர் கடைசியாக ஜெயம்ரவியுடன் சைரன் படத்தில் நடித்திருந்தார் அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்துக்கு கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த புடவையின் விலை குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ என வரிசையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.வெகுவாக அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே சம்பாதித்தார். ஆனால் சைரன் படத்தை தவிர வேறேதும் தமிழில் பெரிதாக வாய்ப்பு வராமல் சைலன்டாக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அண்மையில் பிரமாண்டமாக நடந்த இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் கீர்த்தி சுரேஷ்ம் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் கவரக்கூடிய புடவையில் வந்த கீர்த்தி சுரேஷ்ன் அந்தப் புடவையின் விலை குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி அந்தப் புடவையின் விலை சுமார் மூன்று லட்சம் ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது இதை அறிந்த ரசிகர்கள் இவ்வளவு ரூபாய் ஒரு புடவைக்கு செலவு செய்கிறாரே என ஆச்சரியத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News