நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி தற்போது சூர்யாவின் 45வது திரைப்படத்தை இயக்கிவருகிறார். இதன் தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் நேற்று இயக்குநர் ஆர்ஜே பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
இதற்கு முன் இயக்கிய படங்களிலும், நடித்த படங்களிலும் தனது பெயரை ‘ஆர்ஜே பாலாஜி’ என குறிப்பிட்டிருந்த அவர், இந்த “கருப்பு” பட போஸ்டரில் தனது பெயரை ‘ஆர்ஜேபி’ என சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கருப்பு பட தலைப்புக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பிற்கும் உங்கள் அன்புக்கும் நன்றி, அடுத்த மாதம் மிகப்பெரிய விருந்து மிகப்பெரிய நாளில் உங்களுக்கு காத்திருக்கிறது தயாராக இருங்கள் என தெரிவித்துள்ளார். சூர்யாவின் பிறந்தநாள் அடுத்த மாதம் ஜூலை 23 என்பது குறிப்பிடத்தக்கது.