நடிகர் அதர்வா தற்போது நெல்சன் வெங்கடசன் இயக்கத்தில் ‘டி.என்.ஏ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் பின்பு, லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வேறொரு புதிய படத்திலும் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கவுள்ளார். இந்த படத்தில், பிரேமலு படத்தின் மூலம் பிரபலமான மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நிஷாரிக்கா நடித்துக்கவுள்ளார். இந்த படத்தின் கதைக்களம் அமெரிக்காவைச் சுற்றி நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம் அடுத்ததாக, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தை சுதா கொங்கராவின் உதவியாளராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கவுள்ளார். இதில், பிரதீப்பிற்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் தேதி சீக்கிரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ரெபல் படத்தை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க மமிதா பைஜூ கமிட்டாகி வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
