மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. விடாமுயற்சி படப்படிப்பு நிறுத்தப்பட்ட சமயத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். இதுவரை படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் முதல் ஷெட்யூல் ஷூட்டிங்கும் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குட் பேட் அக்லி படமானது அடுத்த வருடம் ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அடுத்த ஷெட்யூலுக்காக படக்குழு ஜப்பான் செல்லவுள்ளதாக BH கூறப்படுகிறது. அந்த ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “குட் பேட் அக்லி” படத்தில் அஜித் சார் மாஸாக ஒரு நடனம் ஆடியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.