தமிழ் சினிமாவில் சூதுகவ்வும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அசோக் செல்வன், தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து பாராட்டைப் பெற்றவர். நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், மன்மத லீலை போன்ற படங்களில் அவரது நடிப்பு குறிப்பிடத்தக்கதாக பேசப்பட்டது.

சமீபத்தில் வெளியான தக் லைப் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். முன்னதாக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற போர்த் தொழில் திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்திருந்தார்.
இந்நிலையில், அசோக் செல்வனின் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜை இன்று தொடங்கியுள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டூடியோ நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இதில் கதாநாயகியாக நிமிஷா சஜயன் நடிக்க உள்ளார். இப்படத்தை சிபி மணிகண்டன் என்பவர் இயக்க, பிரபல இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.