அஜித் குமார் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி திரைப்படம், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில், அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.மகிழ் திருமேனி, விடாமுயற்சி திரைப்படம் அஜித்தின் வழக்கமான மாஸ் படமாக மட்டுமே இருக்காது என்றும், அவரது நடிப்பிற்காகவே இந்தப் படத்தை பலமுறை பார்க்கலாம் என்றும் கூறியிருந்தார். இதன் மூலம், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155279-1-683x1024.jpg)
இந்நிலையில், படம் வெளியான பிறகு, ரசிகர்கள் இது அஜித் படமாகவும் இல்லாமல், மகிழ் திருமேனி படமாகவும் இல்லாமல் இருப்பதாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.இந்த நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. விடாமுயற்சி வெளியான நாளில், “சில நேரங்களில் இந்த விஷயங்கள் எப்படி நடக்கும் என நீங்கள் கவலைப்படுவதை நிறுத்தும்போது அற்புதம் நிகழும்” என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155412-594x1024.png)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155414-605x1024.png)
மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்குவதற்கு முன்பு, அஜித்தின் 62வது படத்தை இயக்கும் பொறுப்பு விக்னேஷ் சிவனுக்கு அளிக்கப்பட்டது. இதை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், சில காரணங்களால், விக்னேஷ் சிவன் இந்தப் படத்திலிருந்து விலக்கப்பட்டார். அதன் பிறகு, மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார்.இந்நிலையில், விடாமுயற்சி படம் வெளியான முதல் நாளிலேயே கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் நிலையில், விக்னேஷ் சிவன் பதிவிட்ட இந்தக் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.