ஹிப்ஹாப் தமிழா கடைசியாக கார்த்திக் வேணுகோபால் இயக்கிய ‘பி.டி சார்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. இதைத் தொடர்ந்து, அவர் ‘கடைசி உலகப் போர்’ படத்தை இயக்கி, அதில் நடித்தும், படத்தை தயாரித்தும் இருக்கிறார்.
இந்த படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் முதல் தோற்றம் மற்றும் ஒரு சிறு காட்சி வீடியோ சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இப்படத்தின் ப்ரோமோ பாடலாக வெளியிடப்பட்ட ‘பூம்பாஸ்டிக்’ பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தில் நாசர், நட்டி நட்ராஜ், முனிஷ்காந்த், ஷா ரா, அனாகா, அழகம் பெருமாள், சிங்கம்புலி, குமரவேல், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில், படத்தில் நடித்த நடிகர்கள் அவர்களின் கதாப்பாத்திரம் மற்றும் படத்தில் இருந்த அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துள்ளனர். படக்குழுவினர் பெரும் முயற்சியையும், கடின உழைப்பையும் செலுத்தியுள்ளனர். இதனால், இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.