விஜய்யும் அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர்.அதன் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை. இருப்பினும், இருவரும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று இன்றுவரை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.ஏனோ , சில காரணங்களால் இருவரும் அதைத் தவிர்த்தார்கள்.இந்நிலையில், இயக்குனர் சரணுடன் இணைந்து விஜய்யின் படத்தை அஜித் ரகசியமாக பார்ததாக தகவல் வெளியாகியுள்ளது .
இந்திய சினிமாவின் டாப் ஹீரோக்கள் பட்டியலில் அஜீத்தும் விஜய்யும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்கள்.அதேபோல், தற்போதைய நிலையை அடைய இருவரும் பல கஷ்டங்களை சந்தித்துள்ளார்கள். விஜய்யை உருவ கேலி கிண்டல் மற்றும் தமிழில் சரியாக பேசத் தெரியாதவர் எனவும் அஜித்தை உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிக்கத் தெரியாதவர், நடனமாடவில்லை என்று விமர்சித்து கேலி செய்தார்கள்.
அவர்கள் இப்போது இருக்கும் இடத்திற்கு சாதாரணமாக வரவில்லை. அவர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்த அயராது உழைத்ததால் தான் இருவரும் இப்போது சூப்பர் ஸ்டார்களாகிவிட்டனர். இரண்டு பேருக்கும் போட்டி என்ற நிலைதான் இருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளுக்குள் ஆசை இருப்பதாகவே தெரிகிறது.
அஜித்துடன் மங்காத்தா படத்தை பார்த்த பிறகும் விஜய் வெங்கட் பிரபுவிடம் பேசியபோது நீங்கள் சொல்லியிருந்தால் அர்ஜுன் வேடத்தில் நான் நடித்திருப்பேன் என்றார். இதை வெங்கட் பிரபுவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த சமயத்தில் அஜித் விஜய் படத்தை ரகசியமாக பார்த்தது தெரியவந்திருக்கிறது.விஜய் நடித்த வில்லு படத்தை; தன்னுடைய ஃபேவரைட் இயக்குநர் சரணுடன் சேர்ந்து சென்னையில் ஒரு தியேட்டரில் மாறு வேடத்தில் சென்று பார்த்தாராம். பார்த்ததோடு மட்டுமின்றி படம் பார்க்கையில் சில காமெடி சீன்களுக்கு விழுந்து விழுந்து சிரித்து என்ஜாய் செய்தார் என்று இயக்குநர் சரண் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.