முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுதா கொங்கரா. ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த துரோகி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/zz1-1.jpg)
அதன்பின்னர் 2016 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த இறுதி சுற்றுபடத்தை இயக்கி இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமில்லாது அந்தப்படம் மாதவனுக்கு ஒரு கம் பேக் ஆக அமைந்தது. அப்படத்தில் ரித்திகா சிங் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/Z112-1.jpg)
இறுதிச்சுற்று வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கினார் சுதா கொங்கரா. இதுவே மிகப் பெரிய திருப்பு முனையாக அவரை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல அமைந்தது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/Z123-1.jpg)
மீண்டும் சூர்யாவை வைத்து புறநானூறு படத்தை இயக்கவிருந்தார் அப்படம் சில காரணங்களால் தள்ளிபோனது. இந்நிலையில் விக்ரமின் மகனான துருவ் விக்ரமிற்கு ஒரு கதையை கூறியிருக்கிறார் என தகவல் வெளி வந்துள்ளது.விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்த மகான் திரைப்படத்திற்கு பின்னர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் இப்படத்தில் கபடி வீரராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/Z1234-1.jpg)