Tuesday, September 17, 2024

புத்தி கெட்டு திரிந்தால் தான் புத்தி வரும்! கொரானா தடுப்பூசிக்கு தத்துவம் சொன்ன செல்வராகவன்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கோவிட் தடுப்பூசி பற்றி அதிர்ச்சிகரமான தகவல்கள் பரவி வரும் நிலையில் இயக்குனருகம் நடிகருமான செல்வராகவன் அவரது அதிருப்தியை தெரிவித்தது மட்டுமில்லாமல் ஒரு தத்துவத்தையும் கூறியிருந்ததார்.அது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அதாவது, இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே ! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள் ! புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் ! இந்த நொடிதான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள்” என இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட் தீயாக பரவி வருகிறது.

தமிழில் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம், புதுப்பேட்டை 2ம் பாகம், ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் என வரிசையாக பல படங்களை செல்வராகவனிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.கடைசியாக தம்பி தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் திரைப்படம் வெளியாகி தோல்வியை தழுவியது.

அதன் பின்னர் நடிகராக வலம் வந்த செல்வராகவன் பகாசூரன், மார்க் ஆண்டனி படங்களில் நடித்த பின்னர் இந்த ஆண்டு எந்தவொரு படத்திலும் தலை காட்டவில்லை.இப்படி விஷயம் என்னனு தெரிஞ்சிருந்தா நான் போட்டிருக்க மாட்டேன் என கோவிஷீல்டு சர்ச்சை குறித்த கமெண்ட்டுகளை போட்டு செல்வராகவனை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2, 7ஜி ரெயின்போ காலனி 2 படமெல்லாம் எப்போ தான் பண்ணுவீங்க செல்வா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் தனுஷ் ஒரு பக்கம் குபேரா, ராயன், இளையராஜா என பல படங்களில் பிசியாக உள்ள நிலையில், இப்போதைக்கு அவர் அண்ணன் செல்வராகவனுக்கு கால்ஷீட் கொடுக்க மாட்டார் என்றும் தகவல்கள் உலாவுகின்றன.

- Advertisement -

Read more

Local News