Saturday, July 13, 2024

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் மட்டுமல்லாது நடிகர் என்ற அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். இவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய கோமாளி படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து அவரே இயக்கி அவரே நடித்த லவ் டுடே திரைப்படம் சினிமா ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்தது. தற்போது பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் வேல்யூ தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ள நட்சத்திரங்களை வைத்து இயக்கி வெற்றியும் பெற்றார். இவரின் வித்தியாசமான திரைக்கதை காட்சி அமைப்புகள் பலரையும் கவர்ந்தது.கோமாளி திரைப்படம் புதியதொரு நகைச்சுவை கலந்த அனுபவத்தை தந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது‌. இந்தப்படம் அதன் திரைக்கதை மற்றும் ஜெயம் ரவியின் வெகுளித்தனமான என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்ற வசனம் படத்திற்கு அடையாளத்தை கொடுத்தது எனலாம்.

விக்னேஷ்.சிவனின் இயக்கத்தில் உருவாகும் எல்ஐசி படத்தில் பிரதீப் மற்றும் கிருத்தி ஷெட்டி , எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.இந்நிலையில் அவர் அடுத்ததாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் இணைய உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.இந்தப்படத்தில் அவர் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாகவும் அவருக்கு படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இந்தப்படத்தை சுதா கொங்கராவின் அசிஸ்டெண்ட்ட் கீர்த்தி ஈஸ்வரன் இயக்க உள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தில் தன்னுடைய கதையை சொல்லி ஓகே வாங்கியதாகவும் தொடர்ந்து இந்த கதையை பிரதிப் ரங்கநாதனும் ஓகே செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் தான் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது எல்ஐசி படத்தில் நடித்துவரும் பிரதீப், விரைவில் இதன் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு ஏஜிஎஸ் நிறுவனத்தின்கீழ் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்தே மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் அவர் இணையவுள்ளார்.

- Advertisement -

Read more

Local News