பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், தற்போது அவர் நலமாக இருக்கிறார் என டாக்டர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பி. சுசீலா தமிழ் மட்டுமல்லாது, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
அவருடைய பல பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன. சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருதையும் பெற்றுள்ளார். பழைய நடிகைகள் சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி போன்றவர்களின் படங்களுக்கு அவர் பாடிய பாடல்கள் பெரும் ஹிட் ஆனவை.
தனது மெல்லிய குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட பி. சுசீலா, கடந்த ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடிகாணிக்கை செலுத்தியபோது, ‘நாராயண மந்திரம்’ என்ற பக்தி பாடலை பாடிய வீடியோ வைரலானது. தற்போது, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.