Saturday, September 14, 2024

நொடிக்கு நொடி த்ரில்லர் தரப்போகும் ஜீவா நடித்துள்ள ப்ளாக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! #BLACK

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஜீவா நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் ஜீவா, பல வெற்றிப்படங்களை வழங்கியவர். ‘சிவா மனசுல சக்தி’ போன்ற காதல் திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கியவர், பின்னர் ஆக்சன் படங்களில் நடிக்கத் துவங்கியதும் மார்க்கெட் இழந்தார். 

ஜீவா நடிப்பில் இறுதியான படங்களில் எந்தப் படமும் குறிப்பிடத்தகுந்த வெற்றியைக் கண்டது இல்லை. தற்போது, அவர் ‘பிளாக்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம். இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம். நொடிக்கு நொடி திரில்லர். ஒரு குறிப்பிட்ட இடம் அதாவது அனைவராலும் பயமுறுத்தலான இடமாக பார்க்கப்படும். அந்த இடத்தில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும். இதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும். இப்படிப்பட்ட கதை தான் பிளாக்.

பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கியுள்ளார். பிரியா பவானி நாயகியாக நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் மாதத்தில் திரைக்கு வருகிறது.

- Advertisement -

Read more

Local News