Tuesday, September 17, 2024

நான் என்ன சாதித்தேன்…இங்கு இன்னும் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும் – இசைஞானி இளையராஜா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பு (ஸ்பிக் மேகே) ஏற்பாடு செய்த 9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு சென்னை ஐஐடியில் துவங்கியது. இந்த விழாவை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டிநல்லு மற்றும் இசையமைப்பாளர் மற்றும் எம்.பி. இளையராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த மாநாடு ஒரு வார காலம் நடைபெற உள்ளது, 26ம் தேதி முடிவடைகிறது.சென்னை ஐஐடியில் ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்’ அமைப்பதற்கான ஒப்பந்தம் சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா மியூசிக் மற்றும் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் கையெழுத்தானது.

அந்த விழாவில் இளையராஜா பேசுகையில், “இது எனது வாழ்க்கையில் முக்கிய நாள். ஒரு சிறிய பையனாக இருந்த போது, கிராமத்தில் இருந்து இசை கற்றுக்கொள்வதற்காக 400 ரூபாய் கொடுத்து என்னை அனுப்பிய என் அம்மாவின் நினைவுகள் என்னை விட்டு இன்னும் பிரியவில்லை. அதுவரை இசை என்றால் என்னவென்று தெரியாத நான், இன்று இந்த மையத்தை தொடங்கி அனைவருக்கும் கற்றுக்கொடுக்க முடிகிறது என்பது பிரமிப்பு.

என் கிராமத்தில் இசை கற்றுக்கொடுக்க ஆட்கள் இல்லை, நான் தேடிக்கொண்டே இருந்தேன். ஒருவருக்கு தாகம் வந்தால் தான் அவன் தண்ணியை தேடி கண்டு பிடிப்பான். எந்த வேலை செய்தாலும் அதில் மெய்ப்பொருத்தத்தோடு, தாகத்தோடு செய்தால் சாதிக்கலாம். அனைவரும் நான் சாதித்து விட்டேன் என்கிறார்கள், ஆனால் நான் கிராமத்தில் இருந்து எப்படி வந்தேனோ அதுபோலவே உணர்கிறேன்.

சென்னை ஐஐடியில் இருந்து 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என்பது எனது கனவு. இசை என்பது என் மூச்சாகிவிட்டது. இங்கு இசையை கற்றுக்கொண்டு எட்டுத்திக்கும் சென்று கலை செல்வத்தை பரப்ப வேண்டும், அதனால் தான் இந்த மையம் இந்த நாள் மிக முக்கியமான நாள்” என்றார். இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், திரிபுரா ஆளுநர் இந்திரசேனாவுக்கும் 3டி வடிவிலான கையடக்க வீணை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

- Advertisement -

Read more

Local News