Tuesday, September 17, 2024

நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம்… ஜி.வி போட்ட பதிவு அதிர்ச்சியில் திரையுலகம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ்குமார் 2013 ஆம் ஆண்டு பாடகி சைந்தவியை திருமணம் செய்தார். இவர்களுக்கு அன்வி என்ற 4 வயது பெண் குழந்தை உள்ளது. 2006-ல் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும், நடிகராக வலம் வருபவர்.

இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.ஜி.வி. பிரகாஷ்குமார் தனது மனைவி சைந்தவியுடன் பிரிவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

எக்ஸ் வலைதளத்தில், நீண்ட யோசனைக்குப் பிறகு சைந்தவியும் நானும், எங்கள் திருமண வாழ்க்கையின் 11 ஆண்டுகளுக்குப் பின், ஒருவருக்கு ஒருவர் மரியாதையுடன், எங்கள் மன அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் பிரிந்து செல்ல தீர்மானித்தோம்.

இந்த ஆழமான தனிப்பட்ட மாற்றத்தின் போது எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதை ஏற்றுக்கொண்ட நாங்கள், இது இருவரின் நலனுக்காக எடுத்த சிறந்த முடிவு என்று நம்புகிறோம். இந்தக் கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவை வேண்டுகிறோம் என பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News