விஜய் கதாநாயகனாக நடித்து, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி, அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான இசை வெளியீடு ‘சிங்கிள், சிங்கிள்’ ஆகவே நடந்து முடிந்துவிட்டதாகத் தெரிகிறது.

இதற்கு முன்பு, ‘விசில் போடு, சின்னச் சின்ன கண்கள், ஸ்பார்க்’ போன்ற பாடல்கள் குறிப்பிட்ட இடைவெளியில் சிங்கிள், சிங்கிளாக வெளியானது. அடுத்து, நாளை மறுதினம் ஆகஸ்ட் 31ம் தேதி, 4வது சிங்கிளாக ஒரு பாடலை வெளியிட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. கடைசியாக ஸ்பார்க் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
அந்தப் பாடல் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து அதிரடியாக நடனமாடிய பாடல் என்று கூறப்படுகிறது. அந்தப் பாடல், படத்தின் ஹைலைட்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வார இறுதியில் பாடலை வெளியிட்டு, ‘வைப்’ ஏற்படுத்தி, அப்படியே படத்தின் ரிலீஸ்வரை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.