மலையாளத்தில் சில திரைப்படங்களிலில் அறிமுகமாகி, நடித்துவரும் நடிகை சம்ரிதி தாரா பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு, பல பட்டங்களை வென்றுள்ளார். இந்நிலையில், அவர் தமிழில் முதல் முறையாக ‘மையல்’ படத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தை ஏபிஜி. ஏழுமலை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் சம்ரிதி தாரா ‘மைனா’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த சேதுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் ஒரு சமூக பிரச்சினையை எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.அதோடு, இப்படத்தில் பி.எல். தேனப்பன் மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திருவண்ணாமலை அருகே உள்ள கல்வராயன் மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அழகிய இடங்களில் முழு படமும் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் சுமார் 37 நாட்களில் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
