Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கோடையை கொண்டாட்டமாக்க வரிசைகட்டி நிற்கும் படங்கள்! என்னென்ன பாருங்களேன்‌…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமலின் இந்தியன் 2, விக்ரமின் தங்கலான், தனுஷின் ராயன், ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய படங்கள் இந்த கோடைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை சரியான அதிகாரபூர்வ தேதிகள் வெளியாகவில்லை.இருப்பினும், கோடைக்கு ஏற்றபடி சில படங்கள் ரிலீஸுக்கு தயாராகி விட்டன.

கமல்ஹாசன், பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி, சுந்தர்.சி.யின் அரண்மனை 4, பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகும் டீன்ஸ் சந்தானம் நடித்த இங்க நான்தான் கிங்கு, கவின் நடித்த ஸ்டார், சாய் தன்ஷிகா, அஷோக் நடித்த தி ஃபுரூப், உள்ளிட்ட படங்கள் மே மாதத்தில் வெளியாகவுள்ளன. இவை ரிலீஸ் ஆகும் என்றாலும், அதிகாரபூர்வ தேதி இன்னும் சில நாட்களில் உறுதி செய்யப்படும் என தெரிகிறது.

கீர்த்தி சுரேஷின் ரீவால்வர் ரீட்டா மற்றும் ரகு தாத்தா ஆகிய இரண்டு படங்களும் வெளியீட்டிற்காக தயாராகி விட்டன. இரண்டில் ஒன்றை திரையிட முயன்றனர். ஆனால், இரண்டு படங்களின் வெளியீடும் தள்ளிப்போகிறது என்று தகவல்.அதேபோல, துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், சூரி நடித்த ‘கருடன்’ படம் வெளியாகும் என்றனர். ஆனால், படத்தின் பேட்ச் வொர்க் இன்னும் முடியாமல் இருப்பதால், அது முடிந்த பிறகு மட்டுமே அறிவிப்பு வெளியாகும்.

மிஷ்கினின் பிசாசு 2, அமீர் நடித்த உயிர் தமிழுக்கு ஆகிய படங்கள் வெளிவரும் எண்ணத்தில் உள்ளன. தற்போது ‘கல்கி 2898 ஏடி’ படத்திற்கே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, அன்னா பென் ஆகியோர் நடிக்கின்றனர்.

அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதியன்று மங்காத்தா மறுவெளியீடு செய்யப்படுகின்றன.

- Advertisement -

Read more

Local News