தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நயன்தாராவை, அவரது ரசிகர்கள் அன்புடன் நயன் அல்லது லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கின்றனர். தொடக்கத்தில் நடிகையாக இருந்த நயன், திருமணத்திற்குப் பின்னர் தனது கணவர், இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இருவரும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஜோடியாகத் திகழ்கின்றனர். மேலும், அவர்கள் சமூக வலைதளங்களில் பகிரும் புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளிக்கின்றனர். சமீபத்தில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளான உயிர் மற்றும் உலக் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படங்களில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து நடந்து வரும் தோற்றம் மிகவும் அழகாகக் காட்சியளிக்கிறது. இந்த புகைப்படங்களுக்கு நயன்தாரா ஆங்கிலத்தில் “Mine” என கேப்ஷனையும் இடப்பட்டுள்ளது, இது ரவுடிதான் படத்தில் இடம் பெற்ற, “கண்ணான கண்ணே” பாடலின் வரிகளை நினைவூட்டுகிறது.