இயக்குநர் ராஜு முருகன் மற்றும் எஸ்பி சினிமாஸ் வழங்கும் பராரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் பராரி.
இயக்குநர் ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி, “பராரி” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிழைப்பிற்காக தங்களது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயரும் மக்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இதில், “தோழர் வெங்கடேசன்” படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். “பரியேரும் பெருமாள்” படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஸ்ரீதர் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, “பராரி” படம் இணையத்தில் வெளியாகி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.