Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

ஓ.டி.டி-ல் 100 மில்லியன் நிமிடங்களை கடந்த தலைமை செயலகம் வெப் சீரிஸ்…கேக் வெட்டிக் கொண்டாடிய இயக்குனர் வசந்தபாலன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS?

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில், ஆடுகளம் கிஷோர், பரத், ஸ்ரேயா ரெட்டி, தர்ஷா குப்தா, ரம்யா நபீசன், சந்திரபாபு ஆகியோர் நடித்த, ஜெயமோகனின் வசனத்தில், ராதிகா சரத்குமார் தயாரித்த “தலைமைச் செயலகம்” என்ற வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. அரசியல் கதைக்களத்தை மையமாகக் கொண்ட இந்த சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முதலமைச்சர் சிறைக்கு செல்ல, அவரின் பதவியை கைப்பற்ற நிகழும் அரசியல் சதுரங்க ஆட்டங்களை விவரிக்கிறது இந்த வெப் சீரிஸ். எதார்த்த கதைகள் மூலம் பிரபலமானவர் வசந்த பாலன் இவரின் வெயில், அங்காடித் தெரு உள்ளிட்ட படங்கள் தமிழக சினிமாவை இந்திய அளவில் உயர்த்தியது. அவரின் மற்ற படங்கள் அரவான், காவியத் தலைவன், அநீதி ஆகியவை விமர்சன ரீதியாக வெற்றிப் பெற்றன.

தற்போது வெளியாகியுள்ள “தலைமைச் செயலகம்” வெப் சீரிஸ் 100 மில்லியன் நிமிடங்கள் பார்க்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, இயக்குநர் வசந்த பாலன் மற்றும் படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இந்தக் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை இயக்குநர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News