விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்குமார் தற்போது அஜர்பைஜானில் இருந்து இந்தியாவுக்கு வரவுள்ளார் தகவல் வெளியாகியுள்ளது. தனது சொந்த காரணங்களுக்காக வரும் ஜூலை 1ஆம் தேதி அஜித் சென்னைக்கு வரவுள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சமீபத்தில் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கியது. அதே சமயம் துபாயில் அஜித் ரேஸ் காரில் பந்தய களத்தில் சீறிப்பாய்ந்த வீடியோக்கள், ரேஸ் கார்கள் மற்றும் ரசிகர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வைரல் ஆகின.
இந்நிலையில் அஜர்பைஜானில் இருந்து அஜித் சென்னை வந்த பின்னர், மீண்டும் அஜர்பைஜானுக்கே செல்வாரா அல்லது, ஜப்பானுக்குச் சென்று குட் பேட் அக்லி படத்தில் நடிப்பாரா எனவும் பேசப்பட்டு வருகிறது. விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல், குட் பேட் அக்லியின் செகண்ட் லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.