Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ரீ ரிலீஸ் ட்ரெண்ட்டில் இணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… விரைவில் திரைக்கு வரும் படையப்பா…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல திரைப்படங்களை மீண்டும் வெளியிடும் ரீ ரிலீஸ் ட்ரெண்ட்டில் கில்லி, பில்லா போன்ற திரைப்படங்கள் மறுபடியும் திரையரங்குகளில் வந்தன. கில்லி படம் மீண்டும் வெளியிடப்பட்டபோதும் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் 10 ஏப்ரல் 1999 அன்று தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளிவந்தது.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினியுடன் சிவாஜி கணேசன், லட்சுமி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சித்தாரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்த இந்த படம், வெளியானபோது மிகப்பெரும் வெற்றியடைந்தது. இப்படத்தின் முதல் பாதியில், ரஜினி மிகச் சுறுசுறுப்பாகவும், வாயில் மவுத் ஆர்கன், கையில் காப்பு என இளைஞர்களுக்கு பிடித்த கெட்டப்பில் தோன்றுவார். ரசிகர்களுக்குப் பிடித்த வசனங்களை எழுதும் பொறுப்பையும் ரஜினியே ஏற்றுக்கொண்டார்.

‘போடா, ஆண்டவனே நம்ம பக்கம்தான் இருக்கான்’, ‘அதிகமா ஆசைப்படற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை’ போன்ற வசனங்களை அவர் எழுதியிருந்தார். ரம்யா கிருஷ்ணனின் வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

தமிழ் சினிமா ரசிகர்கள் படையப்பா படத்தை திரையரங்குகளில் கூட்டமாக குடும்பத்தோடு வந்து ரசித்தனர். குழந்தைகள் முதல் தாய்மார்கள் வரை அனைவரையும் கவர்ந்த இன்னொரு ரஜினியின் படம் இதுவரை இல்லை என்று கூறலாம். இந்நிலையில், படையப்பா திரைப்படத்தை மீண்டும் வெளியிட தயாரிப்பாளரான தேனப்பன் முடிவு செய்துள்ளார்.அதற்காக நடிகர் ரஜினிகாந்த்திடம் ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படையப்பா படம் மீண்டும் வெளியிடபாபடும் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

Read more

Local News