Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

மீண்டும் இணையும் ஜோ பட ஜோடி ! ஆண்களை பற்றி பேச வரும் படம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘ஜோ’ படத்தின் அசத்தலான வெற்றிக்கு பின் ரியோ ராஜுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் ஜோ பட ஹீரோயினுடன் ரியோ ராஜ் இணைந்த புதிய திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் சென்னையில் நடைபெற்றது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களான ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த “ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்” நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில் , அறிமுக இயக்குனர் “பிளாக்‌ ஷீப்” கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது.

அதே போல், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பிளாக்‌ ஷீப் ஆர்.ஜே.விக்னேஷ், ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், கஜராஜன், ஜென்சன் திவாகர், ஆகியோரும் நடிக்கவுள்ளாரகக்ள்.இரண்டே மாதங்களில் படப்பிடிப்பை முடித்து, இந்த வருட இறுதிக்குள் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இப்படம் திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லப்போகும் முதல் திரைப்படமாக நிச்சயம் இந்தப்படம் இருக்கும் என சொல்லி தன்னம்பிக்கையோடு சிரிக்கிறார் இயக்குநர் கலையரசன் தங்கவேல். எனவே இப்படம் நிச்சயம் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News