Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே… வைரலாகும் இளையராஜா யுவன் புகைப்படம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தொடர்ந்து தன்னுடைய இசை மற்றும் பாடல்கள் மூலம் தான் எப்போதும் இசைஞானி தான் என்பதை உணர்த்தி வருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் தன்னுடைய இசையால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.தற்போது யுவன் சங்கர் ராஜா விஜயின் கோட் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்நிலையில் இளையராஜா தான் மொரிஷியஸ் தீவில் உள்ளதாக தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜாவும் மொரிஷியஸ் வந்துள்ளதாக தெரிகிறது. அடுத்தடுத்து மொரிசியசில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இளையராஜா.

ஒரு புகைப்படத்தை இளையராஜா பதிவிட்டுள்ளார் அதில் யுவன் சங்கர் ராஜாவிற்கு இளையராஜா சாப்பாடு ஊட்டி விடுவது போல காணப்படுகிறது. யுவன் சங்கர் ராஜாவும் மிகவும் ஆர்வமுடன் தன்னுடைய தந்தையின் கைகளால் சாப்பாட்டை வாங்கி சுவைப்பதாக இந்த புகைப்படத்தில் காணப்பட்டது. இந்தப் புகைப்படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

- Advertisement -

Read more

Local News